Home கலை உலகம் பிக்பாஸ்: இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை!

பிக்பாஸ்: இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை!

938
0
SHARE
Ad

Bigboss-Bannerசென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியேற்றப்படவில்லை. வழக்கமாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவர் இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

இந்த வாரம் வெளியேற்றப்பட ஹரிஷ், சுஜா, பிந்து ஆகிய மூவரும் முன்மொழியப்பட்டிருந்தனர்.

ஆனால், நிகழ்ச்சி நடத்திய கமல்ஹாசன் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட வேண்டாமே எனப் பலரும் கேட்டுக் கொண்டதால், இந்த வாரம் யாரையும் வெளியேற்றப்போவதில்லை என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் கமல் அந்த முடிவை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் அறிவிக்கவில்லை. வெளியேற்றப்பட முன்மொழியப்பட்டிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் ‘பிரீஸ்’ (உறைந்து அசையாமல் இருங்கள்) என கமல் கட்டளையிட்டார். பின்னர் ஹரிஷ் காப்பாற்றப்பட்டார் என்றும் பிந்து காப்பாற்றப்பட்டார் என்றும் கமல் ஒவ்வொருவராக அறிவித்தார். வெளியேற்றப்படும் சுஜா வெளியே வாருங்கள் என அறிவித்தார்.

அனைவரும் உறைந்து அசையாமல் நிற்க, சுஜா கண்ணீருடன் ஒவ்வொருவரிடமும் சில வசனங்கள் பேசி அனைவருடனும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வர முற்பட்டபோது, கமல் சுஜாவை வழியனுப்பி வைக்குமாறும், சுஜாவுடன் வெளியே வருமாறும் ஜூலி, சக்தி, ஆர்த்தி ஆகிய மூவருக்கும் கட்டளையிட்டார்.

பின்னர் புதிய திருப்பமாக சுஜா தனியறையில் ‘திரிசங்கு சொர்க்கம்’ போன்று அடுத்த சில நாட்களுக்கு வைக்கப்பட்டிருப்பார் என்றும் கமல் தெரிவித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுஜா தனியறையில் இனி தங்க வைக்கப்படுவார். அவருடன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் பார்க்க முடியும்.

இவ்வாறாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியங்கள் தொடர்கின்றன.

-செல்லியல் தொகுப்பு