Home நாடு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்து

யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்து

757
0
SHARE
Ad

upsr-2017-logoஇன்று திங்கட்கிழமை தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும், சிறந்த முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற செல்லியல் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக, புபிஎஸ்ஆர் தேர்வு என்பது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான களமாகும். இந்தத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி அடைவதன் வழி அடுத்து இடைநிலைப் பள்ளிக்கு செல்லும்போது அங்கு கல்வியில் சிறக்கவும், மனோ ரீதியாகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், தங்களின் நடப்பு கல்வித் தேர்ச்சியை அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு யுபிஎஸ்ஆர் தேர்வுகள் உதவுகின்றன.

தமிழ்ப் பள்ளி மாணவர்களை யுபிஎஸ்ஆர் தேர்வுக்கு தயார் செய்து வழிகாட்டியதில் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும் பெற்றோர்களுக்கும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த வேளையில் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்ச்சி பெறவும் செல்லியல் சார்பாக நல்வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.