Home நாடு மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!

மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!

1042
0
SHARE
Ad

mahathirமூவார் – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென அம்னோ தலைவர்கள் சிலர் கூறி வருவதை பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது மறுத்திருக்கிறார்.

இது குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் பேசிய மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக ஆதிக்கம் செலுத்தாது. அம்னோவில் எப்படி மசீச-வும், மஇகா-வும் ஆதிக்கமின்றி செயல்படுகின்றதோ? அது போல் தான் ஜசெக செயல்படும் என்று கூறியிருக்கிறார்.