Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் மாநிலம் எது?

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் மாநிலம் எது?

918
0
SHARE
Ad

Kuala-Lumpur-Malaysiaகோலாலம்பூர் – சுதந்திரத்திற்குப் பின் கடந்த 60 ஆண்டுகளாக மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பான்மையாகப் பங்களிப்பதில் முதன்மை வகிக்கும் மாநிலமாக சிலாங்கூர் இருந்து வருவதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக் கருத்தரங்கு 2017-ல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டில் நாட்டில் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருட்களில் 22.7 விழுக்காடு பங்களிப்பை சிலாங்கூர் மாநிலம் தான் அளித்திருக்கிறது என்றும், அது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.1 விழுக்காடு அதிகம் என்றும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து, விண்வெளி, இ-காமர்ஸ், சேவைகள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றது என்றும் அஸ்மின் அலி குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், சிலாங்கூரில் மிக விரைவில், சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையம் உருவாக்கவும் மாநில அரசு முனைப்புக் காட்டி வருவதாகவும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.