Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: பிரதமர் நஜிப் இரங்கல்!

சமயப்பள்ளி தீ விபத்து: பிரதமர் நஜிப் இரங்கல்!

889
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் சமயப்பள்ளியான டாருல் குரான் இட்டிஃபாக்கியாவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 20-கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர்.

22 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் என மொத்தம் 24 பேர் பலியாகியிருப்பதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

இதனிடையே, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இச்சோகத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இன்னாலில்லா.. டாருல் குரான் இட்டிஃபாக்கியா சமயப்பள்ளி தீயில் சிதைந்து போனதையும், அதில் 20 மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதையும் படிக்கும் போது மிகவும் சோகமடைகின்றேன்” என்று நஜிப் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகாரப்பூர்வப் பயணமாக நஜிப் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.