Home நாடு சமயப்பள்ளி தீவிபத்து: மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம்!

சமயப்பள்ளி தீவிபத்து: மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம்!

887
0
SHARE
Ad

Tahfiz fireகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் இஸ்லாம் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆசியர்கள் உட்பட 24 பேர் தீயில் கருகி பலியாகினர்.

இந்நிலையில், இத்தீவிபத்திற்கு மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றது.

இது குறித்து துணை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம் கூறுகையில், “இப்போதைக்கு மின்சாரக் கசிவு தான் இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்புகிறோம். தடவியல் நிபுணர்கள் அனைத்து பரிசோதனைகள் தற்போது நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், விபத்து நடந்த நேரத்தில் பள்ளியில் குழந்தை ஒன்று இருந்ததாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

விபத்து நடந்த போது பள்ளியில் 36 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் இருந்தனர் என்றும், அவர்களில் 22 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் தீயில் கருகி பலியாகியிருப்பதாகவும் மாநகரக் காவல்துறைத் தலைமை ஆணையர் அமர் சிங் தெரிவித்திருக்கிறார்.

இறந்தவர்கள் அனைவரும் பள்ளியில் மூன்றாவது மாடியில் தான் இருந்தனர் என்றும் காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது.