Home உலகம் அமெரிக்கா என்றாலும் உடற் பயிற்சி தவறாத நஜிப்!

அமெரிக்கா என்றாலும் உடற் பயிற்சி தவறாத நஜிப்!

864
0
SHARE
Ad

najib-usa-gym-14092017.jpg-largeவாஷிங்டன் – அமெரிக்கத் தலைநகருக்கான அதிகாரத்துவ வருகை, அமெரிக்க அதிபருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, தொழில் முதலீடுகள், அரசாங்க விவகாரங்கள் எனப் பல சந்திப்புக் கூட்டங்கள் இருந்தாலும், தனது அமெரிக்க வருகையின் போது, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நஜிப் செய்தது – தான் தங்கியிருந்த தங்கும் விடுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடல் பயிற்சி செய்ததுதான்.

டிரம்ப்புக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இந்த முறை தங்கிய நஜிப் அமெரிக்க நேரப்படி காலையில் எழுந்ததும், தனது அலுவல்களைத் தொடக்குவதற்கு முன்னால் தங்கும் விடுதியில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்த புகைப்படத்தைத் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.