கோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நேற்று வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.
கடந்த வியாழக்கிழமை சமயப்பள்ளி தீவிபத்து குறித்து நஜிப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய நஜிப், நாட்டில் உள்ள அனைத்து சமயப்பள்ளிகளையும் மேம்படுத்தும் வகையில், புத்ராஜெயா 30 மில்லியன் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்.
“அரசாங்கம் முதன் முதலாக சமயப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 30 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி செய்ய முன்வந்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை சமயப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கியிருக்கிறது” என்று நஜிப் கூறினார்.