Home உலகம் லாகூர் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி!

லாகூர் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி!

912
0
SHARE
Ad

PAKISTAN-POLITICSலாகூர் – ‘பனாமா’ விவகாரத்தில், பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

இந்நிலையில், காலியான லாகூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தனது மனைவி பேகம் குல்சூம் நவாசையே போட்டியிட வைத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார் நவாஸ்.

#TamilSchoolmychoice

குல்சூம் நவாசை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளர் யாகூப் ஷேக்கும், முன்னாள் கிரிக்கெட் விரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் ரசீதும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், பேகம் குல்சூம் நவாஸ் 59,413 வாக்குகள் பெற்று, 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.