சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு!

  576
  0
  SHARE

  HIghtidesகோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலக் கடற்பகுதிகளில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவினரால், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர்.

  இது குறித்து சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் அகமட் பைருஸ் முகமது யூசோப் கூறுகையில், வரும் செப்டம்பர் 21 மற்றும் டிசம்பர் 5-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பேரலைகள் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

  சிலாங்கூரில் கிள்ளான், கோல லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர், சபா பெர்னாம் ஆகிய பகுதிகள் இப்பேரலைகளால் பாதிக்கப்படலாம் என்றும் அகமட் பைருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

  Comments