Home நாடு இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென அழைக்கப்படுகிறேன்: நஜிப்

இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென அழைக்கப்படுகிறேன்: நஜிப்

1267
0
SHARE
Ad

MIC71(b)கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் நான், ‘இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென’ அழைக்கப்படுகின்றேன் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஇகாவின் 71-வது பொதுப்பேரவையில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

இது குறித்து நஜிப் மேலும் கூறியிருப்பதாவது:-

“நான் பிரதமராகப் பதவி வகிப்பதற்கு முன்பிலிருந்து இந்திய சமுதாயத்தின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகின்றேன். அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியிடம் அனுமதி பெற்று, இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அமைச்சரவைக் கமிட்டி ஒன்றையும் நிறுவினேன்”

#TamilSchoolmychoice

“இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவார்கள், புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை எந்த ஒரு தலையீடும், அரசியல் விருப்பமும் இன்றி, அதனை உணர்ந்தேன்”

“என்னுடைய தந்தை அல்லது தாத்தா கேரளாவில் இருந்து வரவில்லை என்றாலும் கூட, நான் இன்னும் இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தை என்றே கூறப்படுகின்றேன்” என இன்று புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மஇகா 71-வது பொதுப்பேரவையில் நஜிப் தெரிவித்தார்.