Home கலை உலகம் பிக் பாஸ்: சிநேகன் புள்ளிகளை கணேஷூக்கு வழங்கினார்! சுஜா வெளியேறினார்!

பிக் பாஸ்: சிநேகன் புள்ளிகளை கணேஷூக்கு வழங்கினார்! சுஜா வெளியேறினார்!

1111
0
SHARE
Ad

suja-varuni-big bossசென்னை – தமிழகத்து தொலைக்காட்சி ஸ்டார் விஜய் அலைவரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்,சிநேகன் இதுவரை பெற்ற தான் பெற்ற புள்ளிகளை மற்றொரு பங்கேற்பாளரான கணேஷ் வெங்கட்ராமுக்கு வழங்கினார். இதன் மூலம் கணேஷ் கோல்டன் டிக்கட் எனப்படும்  இறுதிச் சுற்றுக்கான சிறப்பு தங்க அனுமதிச் சீட்டைப் பெற்றார்.

இதன் காரணமாக, மற்றொரு பங்கேற்பாளரான சுஜா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

bigg-boss-kamal-hassanசிநேகன் ஏற்கனவே, கமல்ஹாசனிடம் இருந்து கோல்டன் டிக்கட் பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிவிட்டார். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை முடிந்த நிகழ்ச்சியில், சிநேகன் இதுவரை தான் சேகரித்த புள்ளிகளை, ஒரே ஒருவருக்கு வழங்கலாம் என்றும் அதன் வழி அந்தப் புள்ளிகளைப் பெறும் நபர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவார் என்றும் பிக் பாஸ் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அதன்படி, அந்தப் புள்ளிகளை கணேஷூக்கு வழங்குவதாகவும், அதற்கான காரணத்தையும் சிநேகன் விளக்கினார்.

ஏற்கனவே ஒருமுறை கணேஷ் அவருக்கான புள்ளிகளைத் தனக்கு வழங்கி தன்னைக் காப்பாற்றியிருப்பதாகவும், அதோடு, முந்தைய சம்பவம் ஒன்றில் சோப்புத் தண்ணீரை வீசியடித்ததில் கணேஷ் கண்கள் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் இந்த காரணங்களுக்காக கணேஷூக்குத் தனது புள்ளிகளை வழங்குவதாகவும் சிநேகன் கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.