பெர்லின் – ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மீண்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியிருப்பன் மூலம் அந்நாட்டின் அதிபராக 4-தவணையாக எஞ்சலா மெர்கல் மீண்டும் பதவியேற்கிறார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் அவரது கட்சியின் பெரும்பான்மை முன்பை விடக் குறைந்துள்ளது. அவரது கட்சிக்கும், அவரது தோழமைக் கட்சிகளுக்குமான வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அதே வேளையில், தீவிர வலதுசாரி சிந்தனைகளைக் கொண்ட ‘அல்டர்னேடிவ் ஃபோர் ஜெர்மனி’ (Alternative for Germany) என்ற கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் நுழைவது மெர்கல் உட்பட மற்ற அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலது சாரி சிந்தனைகளைக் கொண்ட கட்சியின் வெற்றி ஏன் என்பது குறித்து ஆராயப்படும் என மெர்கல் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் சனிக்கிழமையோடு ஜெர்மன் அதிபராக 10-ஆண்டுகாலத்தை எஞ்சலா மெர்கல் நிறைவு செய்வார்.