Home நாடு துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது!

துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது!

1078
0
SHARE
Ad

Mustafa Akyolகோலாலம்பூர் – துருக்கி பத்திரிகையாளர் முஸ்தபா ஆக்யோல் நேற்று திங்கட்கிழமை மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூரில் நடைபெறவிருந்த இஸ்லாம் மாநாடுகளில் பேசுவதற்காக ஐஆர்எஃப் (Islamic Renaissance Front) என்ற அமைப்பால் ஆக்யோல் மலேசியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆக்யோலுக்கு ஜாவி அமைப்பு (Federal Territories Islamic Religious Department) அறிக்கை அனுப்பியதாகவும், பின்னர் விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் ஆக்யோல் கைது செய்யப்பட்டதாகவும் ஐஆர்எஃப் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று மாலை நோட்டிங்கம் பல்கலைக்கழகத்தில், “இஸ்லாமிய ஜீசஸ்: யூதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொதுவான விசயங்கள்” என்று தலைப்பில் ஆக்யோல் பேசவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.