Home உலகம் ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் முயற்சி

ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் முயற்சி

1089
0
SHARE
Ad

vaiko-geneva-26092017ஜெனிவா – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் 36-வது ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கூட்டத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு இலங்கை படுகொலை தொடர்பான விவாதங்களில் பங்கேற்கிறார்.

ஜெனிவாவில் அவருக்கு எதிராக இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சில சிங்களக் குழுக்கள் வாக்குவாதம் நடத்தியதாகவும், அவரைத் தாக்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு ஜெனிவாவில் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அவரைச் சுற்றி எப்போதும் இரண்டு பாதுகாவலர்கள் பின் தொடர்கின்றனர் (மேலே படம்).

மு.க.ஸ்டாலின் கண்டனம்

#TamilSchoolmychoice

stalin1_350__இதற்கிடையில் “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.