இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செயலியாக அறிமுகம் கண்ட செல்லியலின் இயங்குதளம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு உள்ளடக்க உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. பல புதிய, நவீன தொழில் நுட்ப அம்சங்களோடு, செயலிகள் தற்போது மெருகேற்றப்பட்டிருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் சுவிப்ட் (swift) எனப்படும் புதிய, மொழி வடிவமைப்புக்கான இயங்குதள தொழில்நுட்பம், செல்லியல் புதிய பதிகையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐபோன்களில் மற்ற செயலிகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ, மற்ற பயனர்கள் எத்தகைய பயனீட்டு அனுபவங்களைப் பெறுகின்றார்களோ, அவ்வாறே செல்லியல் பயனர்களும் அனுபவங்களைப் பெறும் வண்ணம் செல்லியல் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, செல்லியல் செல்பேசி செயலியில் அடங்கியிருக்கும் அத்தனை உள்ளடக்கச் செய்திகளையும், செயலியின் முதல் பக்கத்திலேயே பயனர்கள் தற்போது பார்த்து, படித்து விட முடியும்.
விளம்பரம் இல்லாத வடிவத்திலும் செல்லியல் படிக்கலாம்
ஆனால் இந்த வசதிக்காக ஆண்டு ஒன்றுக்கு நீங்கள் சிறிய அளவிலான கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும். தற்போது இதற்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஆண்டுக்கு வெறும் ரிங்கிட் 12.90 மட்டுமே! அதாவது மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஏறத்தாழ ஒரே ஒரு ரிங்கிட் மட்டும்தான்! இந்தத் தொகையைச் செலுத்துவதன் மூலம் ஆண்டு முழுவதும் ஐபோன் பயனர்கள் விளம்பர இடையூறுகள் இன்றி செல்லியல் செய்திகளைப் படித்து மகிழலாம்!
செல்லியல் செயலியை ஏற்கனவே தங்களின் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்திருப்பவர்களுக்கு புதிய பதிகையும் அதற்குரிய மாற்றங்களும் நேரடியாக, இயல்பாகவே அவர்களின் செயல்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்.
புதிதாகத் தங்களின் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
https://selliyal.com/app