Home நாடு ரெம்பாவ் சமயப்பள்ளியில் தீ: 37 மாணவிகள் உயிர் தப்பினர்!

ரெம்பாவ் சமயப்பள்ளியில் தீ: 37 மாணவிகள் உயிர் தப்பினர்!

1231
0
SHARE
Ad

Maahad Tahfiz Yayasan Sofafireசிரம்பான் – இன்று வியாழக்கிழமை அதிகாலை, ரெம்பாவில் அமைந்திருக்கும் சமயப்பள்ளி மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் அதிருஷ்டவசமாக 37 மாணவிகள் உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாகவும், அடுத்த 15 நிமிடங்களில் தாங்கள் அங்கு இருந்ததாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு தெரிவித்திருக்கிறது.

60 விழுக்காடு சேதமடைந்த விடுதிக் கட்டிடத்தில் இருந்து 37 மாணவிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

யாருக்கும் எந்த சேதமும் இல்லையென மீட்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது தீவிபத்துக் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.