Home உலகம் மலேசியர்கள் வடகொரியா செல்லத் தடை!

மலேசியர்கள் வடகொரியா செல்லத் தடை!

952
0
SHARE
Ad

northkoreaகோலாலம்பூர் – வடகொரியாவிற்குச் செல்ல மலேசியர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது.

இது குறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அமைச்சில் இருந்து அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வரும் வரை, மலேசியர்கள் அனைவரும் வடகொரியா செல்ல தடை விதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுதச் சோதனைகள் காரணமாக, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன.

எனவே எந்த நேரத்தில் அங்கு போர் மூள வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.