கோலாலம்பூர் – பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறித்து சில தகாத வார்த்தைகளை சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பயன்படுத்திய காரணத்திற்காக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், அம்னோ இளைஞர் பகுதித் தலைவருமான கைரி ஜமாலுடின் மீது அன்வார் தொடுத்திருந்த அவதூறு வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், கைரி ஜமாலுடின் அன்வார் குறித்து தெரிவித்திருந்த வார்த்தைகள் அவதூறானவை எனத் தீர்ப்பளித்த கோலாலம்பூர், அதற்கு இழப்பீடாக 150,000 ரிங்கிட் தொகையை கைரி அன்வாருக்கு வழங்க வேண்டும் என்றும், மேலும் 60 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகையையும் அன்வாருக்கு, கைரி வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியது.
நீதிபதி அசிசுல் அஸ்மி அட்னான் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
கடந்த மார்ச் 2008-இல் இந்த வழக்கை அன்வார் தொடுத்திருந்தார்.