Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் அமைச்சரிடம் 10 மணி நேரம் விசாரணை!

ஊழல் தடுப்பு ஆணையம் அமைச்சரிடம் 10 மணி நேரம் விசாரணை!

863
0
SHARE
Ad

RICHARD RIOT-HUMAN RESOURCES MINISTERபுத்ரா ஜெயா – மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜாயிம்-மின் 61 வயது அரசியல் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். விசாரணைக்காக 6 நாட்கள் வரை அவரைத் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து இன்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்த மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் (படம்) சுமார் 10 மணி நேரம் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

மனித வள அமைச்சின் கைத்திறன் மேம்பாட்டு நிதியில் (Skills Development Fund Corp) 40 மில்லியன் ரிங்கிட் கையாடல் நடந்திருக்கலாம் என எழுந்திருக்கும் புகார்களைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்தக் கையாடல்கள் கட்டம் கட்டமாக நடந்தேறியிருப்பதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று காலை சுமார் 10.00 மணியளவில் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நுழைந்த அமைச்சர் ரியோட் இன்று இரவு 8.00 மணியளவில்தான் வெளியில் வந்தார் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த விசாரணை தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் கைத்திறன் மேம்பாட்டு நிதி வாரியத்தின் அதிகாரிகளாவர்.