Home நாடு பிஜே உத்தாரா மஇகா சேவை மையம் திறப்பு விழா

பிஜே உத்தாரா மஇகா சேவை மையம் திறப்பு விழா

1198
0
SHARE
Ad

mic-pj-utara-murugiah-feature-bannerபெட்டாலிங் ஜெயா – மஇகாவின் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சேவை மையங்கள் இயங்க வேண்டும், இந்திய சமுதாயத்துடனான தொடர்புகள் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற மஇகா தலைமைத்துவத்தின் இலக்குகளுக்கு  ஏற்ப, மஇகா பெட்டாலிங் ஜெயா உத்தாரா (வடக்கு) தொகுதியில், கட்சியின் தொகுதி அலுவலகமும், புதிய சேவை மையமும் திறப்பு விழா காண்கிறது.

mic-pj-utara-murugiah-bannerஞாயிற்றுக்கிழமை 1 அக்டோபர் 2017-ஆம் நாள் பிற்பகல் 12.30 மணியளவில் திறப்பு விழா காணும் மஇகா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதி சேவை மையத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் திறந்து வைத்து உரையாற்றுவார்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், மஇகா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் நடவடிக்கைக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பவருமான டத்தோ டி.முருகையா இந்தத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் கீழ்க்காணும் சேவை மையத்தில் நடைபெறும்:

NO: 23-A, JALAN 17/45
46100 PETALING JAYA