புத்ராஜெயா – எஸ்டிஎஃப்டி-யில் இருந்து 40 மில்லியன் ரிங்கிட் மாயமானது தொடர்பாக மனிதவள அமைச்சர் ரிச்சர்டு ரியாட், நேற்று வெள்ளிக்கிழமை 10 மணி நேரங்கள் விசாரணை செய்யப்பட்டார்.
புத்ராஜெயா மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காணப்பட்ட ரிச்சர்டு ரியாட் இரவு 8 மணியளவில் தான் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த விவகாரத்தில் அவரது அரசியல் செயலாளர் ஏற்கனவே ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் வேளையில், அவர் 6 நாட்கள் தடுப்பு காவல் விசாரணையில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமைச்சர் ரிச்சர்டு ரியாட் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எம்ஏசிசி கூறியிருக்கிறது.