Home நாடு “மஇகா வேட்பாளர்கள் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன”

“மஇகா வேட்பாளர்கள் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன”

1145
0
SHARE
Ad

subra-dr-mic-assembly-71-கோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைப்பட்டு விட்டது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அந்த வேட்பாளர்களின் பட்டியலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்குச் சமர்ப்பித்து, அந்த வேட்பாளர்களின் பின்புலத்தை ஆராய வேண்டுமா என்பது பிரதமர் எடுக்க வேண்டிய முடிவு எனவும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட கட்சிகள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அந்த வேட்பாளர்கள் மீது ஊழல் புகார்கள் எதுவும் விசாரணையில் இருக்கின்றனவா என்பது குறித்து ஆணையம் உறுதிப்படுத்த முடியும் என்றும் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தப் பரிந்துரைக்கு பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலிக்க ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது என்றும் வான் அசிசா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.