Home கலை உலகம் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை

அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை

1410
0
SHARE
Ad

vishal-imageசென்னை – தமிழக அரசின் கேளிக்கை வரி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு இந்தியா முழுமையிலும் விதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, கூடுதலாக கேளிக்கை வரியையும், தமிழ் நாடு அரசாங்கம் விதிப்பது குறித்து பல முறை தமிழ்த் திரையுலகினர் ஆட்சேபம் தெரிவித்தும், அதற்கேற்ற வகையில் தமிழக அரசு பதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தயாரிப்பாளர் சங்கமும், திரையங்கு உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவருமான விஷால் இந்த முடிவை இன்று புதன்கிழமை மாலை சென்னையில் அறிவித்தார்.