Home நாடு 100 மில்லியன் திருட்டில் அமைச்சரவை அதிகாரிகளுக்குத் தொடர்பு: எம்ஏசிசி

100 மில்லியன் திருட்டில் அமைச்சரவை அதிகாரிகளுக்குத் தொடர்பு: எம்ஏசிசி

972
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – சுமார் 10 நிறுவனங்களோடு இணைந்து 5 அமைச்சரவை அதிகாரிகள், 100 மில்லியன் ரிங்கிட் நிதிமோசடியில் ஈடுப்பட்டிருப்பதை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கண்டறிந்திருக்கிறது.

“அவர்கள் இதைப் சில வருடங்களாகச் செய்து வந்திருக்கிறார்கள். பல திட்டங்களுக்கு நிதி பெற்று அதனை செயல்பாட்டில் கொண்டு வராமலேயே இருந்திருக்கிறார்கள்”

“சிலத் திட்டங்கள் சொன்னபடி அதன் சிறப்பம்சங்களை அவர்கள் மேற்கொள்ளவில்லை. கண்மூடித்தனமாக சிக்கனப்படுத்தியிருக்கிறார்கள்”

#TamilSchoolmychoice

“இந்த நிதிமோசடி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நடத்தப்பட்டிருப்பதோடு, ஏழைக் குழந்தைகளுக்கான உணவுத் திட்டத்தில் கூட மோசடி செய்திருக்கிறார்கள்” என்று எம்ஏசிசி-க்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக ‘தி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.