Home கலை உலகம் விஜய் ‘மெர்சல்’ – தலைப்பு மாற்றப்படுமா?

விஜய் ‘மெர்சல்’ – தலைப்பு மாற்றப்படுமா?

1078
0
SHARE
Ad

mersel-movie-bannerசென்னை – விஜய் நடித்து தீபாவளித் திரையீடாக வெளியீடு காணவிருக்கும் ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுளளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத் தலைப்பை ஒத்திருப்பதால் “மெர்சல்” என்ற தலைப்புக்கு அனுமதி தரக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை நேற்று  புதன்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

“மெர்சலாயிட்டேன்” என்ற தலைப்பு 2014-ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டதால், விஜய் படத்துக்கு ‘மெர்சல்’ என்ற பெயரே அனுமதிக்கப்படுமா அல்லது புதிய பெயர் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வழக்கு தொடுத்துள்ள தரப்புடன் சமரசம் செய்து கொண்டு, ‘மெர்சல்’ என்ற தலைப்பிலேயே படத்தைத் தொடர்ந்து வெளியிடும் சாத்தியமும் இருக்கின்றன.

#TamilSchoolmychoice