Home நாடு சபா சோதனையில் 150 மில்லியன் ரிங்கிட் பறிமுதல்: எம்ஏசிசி

சபா சோதனையில் 150 மில்லியன் ரிங்கிட் பறிமுதல்: எம்ஏசிசி

1047
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை சபா மாநிலத்தில் பல்வேறு இடங்களில், காலை 10.30 மணி முதல் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நடத்திய சோதனையில் சுமார் 150 மில்லியன் ரிங்கிட் நிதி கைப்பற்றப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக சபாவில் சுமார் 15 இடங்களில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனைகளை மேற்கொண்டதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு முழு விசாரணையை அறிக்கையை அனுப்ப ஊழல் ஒழிப்பு ஆணையம் மேல் விவரங்களைத் திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.