Home நாடு ஜமாலின் செயல்பாடுகளை அம்னோ ஏற்றுக்கொள்ளாது: சாஹிட்

ஜமாலின் செயல்பாடுகளை அம்னோ ஏற்றுக்கொள்ளாது: சாஹிட்

793
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மதுபாட்டில்களை வீசி, காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோசின் நடவடிக்கைகளை அம்னோ ஏற்றுக்கொள்ளாது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

“அவர் 191-வது அம்னோ தொகுதித் தலைவர். மற்ற 190 தலைவர்கள் யாரும் இது போல் எதையும் உடைக்கவில்லை. அதனால் அம்னோ அவரது செயல்களை ஏற்றுக் கொள்ளாது” என்று சாஹிட் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.