Home இந்தியா தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்கிறார்!

தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்கிறார்!

1007
0
SHARE
Ad

BanwarilalPurohitசென்னை -20-வது தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்.

முன்னதாக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் நேற்றோடு அப்பதவியில் இருந்து விடைபெற்றார்.

தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அசாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.