Home இந்தியா பரோலில் சென்னை வருகிறார் சசிகலா!

பரோலில் சென்னை வருகிறார் சசிகலா!

830
0
SHARE
Ad

sasikalaபெங்களூர் – சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நடராஜன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 4 மணிக்கு (மலேசிய நேரப்படி 6.30 மணி) சென்னை வருகிறார்.

உடல் உறுப்புகள் செயலிழந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சசிகலாவில் கணவர் நடராஜனைக் காண அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியிருக்கிறது கர்நாடக சிறைத்துறை.

அதன் படி இன்று அவர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.