Home உலகம் அமைதிக்கான நோபல் -‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது

அமைதிக்கான நோபல் -‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது

826
0
SHARE
Ad

nobel-peace prize-2017-icanஸ்டாக்ஹோம் – 2017-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காகப் போராடி வரும் ‘ஐகேன்’ (ICAN – International Campaign to abolish Nuclear Weapons) என்ற அணு ஆயுத ஒழிப்புக்கான அனைத்துலக பிரச்சார அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதன் மூலம் மனித குலத்திற்கு ஏற்படக் கூடிய அழிவுகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வண்ணம் அந்த அமைப்பு நடத்தி வரும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்காகவும், அத்தகைய அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் வண்ணம் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படுவதை சாதித்திருக்கும் பெரும் பணிகளையும் கருத்தில் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு அந்த அமைப்புக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.