கோலாலம்பூர், மார்ச் 26 – 10ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
பதிவுக்கான இறுதிநாள் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் இம்மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 21 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக உள்நாட்டில் இருக்கும் தமிழாசிரியர்கள், விரைந்து தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
300 வெள்ளி மலேசியப் பேராளர்களுக்கும் 250 வெள்ளி அயல்நாட்டுப் பேராளர்களுக்கான கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் மாநாட்டுப்பதிவு உட்பட உணவு,தங்குமிடம், மாநாட்டுப்பை, எழுதுபொருட்கள் மற்றும் மாநாட்டு ஆவணங்கள் வழங்கப்படும்.
1992இல் சிங்கப்பூர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த முதலாவது மாநாட்டிற்குப்பிறகு, இதுவரை 9 தமிழாசிரியர் மாநாடுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.
மாநாட்டில் கலந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்; எம், மன்னர் மன்னன்(013-3417 389) எஸ்.அருணகிரிநாதன் ( 019-4370 984) எஸ். சுவேதன் (012-230 9207)