சைபர்ஜெயா அனைத்துலக அறிவியல் மருத்துவ கல்லூரியின் இணை வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.பாலன் அவ்விருதை இளையராஜாவுக்கு வழங்கினார்.
மலேசியாவில் இசைஞானி இளையராஜாவின் வழிகாட்டுதலில் இசை பயிற்சி கல்வி தொடங்கப்படவிருக்கிறது.அதனை கௌரவிக்கும் விதமாக அவ்விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகம் இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று இசைஞானி இளையராஜா கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments