Home நாடு மகாதீர் 1 பில்லியன் லஞ்சம் கொடுத்ததை நிரூபியுங்கள் – லிம் கிட் சியாங் சவால்!

மகாதீர் 1 பில்லியன் லஞ்சம் கொடுத்ததை நிரூபியுங்கள் – லிம் கிட் சியாங் சவால்!

940
0
SHARE
Ad

Lim Kit Siang-DAPகோலாலம்பூர் – பக்காத்தானுடன் பெர்சத்து கட்சியை இணைக்க, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தனக்கு 1 பில்லியன் ரிங்கிட் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஜசெக கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் மறுத்திருக்கிறார்.

மகாதீர் எனக்கு 1 பில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததை நிரூபித்தால், நான் மாதம் 1200 ரிங்கிட்டுக்குக் குறைவாகச் சம்பளம் வாங்கும் 1 பில்லியன் மலேசியர்களுக்கு தலா 1000 ரிங்கிட் கொடுக்கிறேன் என்று லிம் கிட் சியாங் சவால் விடுத்திருக்கிறார்.