Home இந்தியா அரசியலில் ரஜினி, கமலுக்கு மக்கள் ஆதரவு இருக்காது: சாருஹாசன்

அரசியலில் ரஜினி, கமலுக்கு மக்கள் ஆதரவு இருக்காது: சாருஹாசன்

974
0
SHARE
Ad

CHARUHASANசென்னை – ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தால், அவர்கள் இருவருக்கும் மக்கள் ஆதரவு இருக்காது என நடிகரும், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

“கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். திறமையானவர், உழைப்பாளி. ஆனால் மக்கள் அவரை ஏற்பார்களா? என்பது சந்தேகம். ரஜினிகாந்தை அரசியலுக்கு ஏன் வரவில்லை? என்று கேட்கும் மக்கள் கமல்ஹாசனை பார்த்து அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள்? என்றுதான் கேட்கிறார்கள்.”

“எனவே கமல்ஹாசனுக்கு முதல்–அமைச்சராகும் வாய்ப்பு இல்லை. தமிழ் நாட்டில் சாதி அடிப்படையில்தான் அரசியல் இருக்கிறது. எனவே கமல்ஹாசனுக்கு அது சாதகமாக இல்லை. கமல்ஹாசன் வேறு ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து விட்டு வந்து இருந்தால் மக்கள் ஏற்று இருப்பார்கள்.”

#TamilSchoolmychoice

“ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமே அரசியலில் பெரிய வாய்ப்பு இல்லை. இருவருக்கும் 10 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். மீதி 90 சதவீதம் ஓட்டுகள் மற்ற அரசியல் கட்சிகளுக்குதான் விழும்” என்று சாருஹாசன் தந்தி டிவி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.