சென்னை – கேரளா திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கமல்ஹாசன் இன்று திங்கட்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், “திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்” என்று தெரிவித்திருக்கிறார்.