Home நாடு ஜாயிஸ் பேச்சாளருக்கு எதிராக காலிட் சமாட் சட்ட நடவடிக்கை!

ஜாயிஸ் பேச்சாளருக்கு எதிராக காலிட் சமாட் சட்ட நடவடிக்கை!

733
0
SHARE
Ad

Khalid Samadகோலாலம்பூர் – அமனா கட்சியின் தொலைத்தொடர்பு இயக்குநர் காலிட் சமாட், ஜாயிஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் பேச்சாளருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினருமான காலிட் சமாட், ஐகேஎஸ்ஐஎம் (Kajian Strategik Islam Malaysia) தலைமைச் செயல் அதிகாரி மஹாமட் நசீர் டீசா தனக்கு எதிராக அந்நிகழ்ச்சியில் அவதூறுக் கருத்துகளை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.