Home கலை உலகம் எந்த கதாபாத்திரமானாலும் நடிப்பேன் : லட்சுமிராய்

எந்த கதாபாத்திரமானாலும் நடிப்பேன் : லட்சுமிராய்

836
0
SHARE
Ad

Kollywood-news-5888மார்ச் 25 – ஹீரோயின் வேடத்துக்காக காத்திருக்க மாட்டேன் என்கிறார் லட்சுமிராய். ஹீரோயின் வேடம் வந்தால் நடிப்பேன் என்று சில நடிகைகள் பிடிவாதமாக இருப்பதுண்டு. இதற்காக காத்திருந்து பட வாய்ப்புகளை இழந்த நடிகைகள் பலர்.

ஆனால் லட்சுமிராய் இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு நடிகையாக விதவிதமான வேடங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். படம் வெற்றி அடைகிறதோ தோல்வி அடைகிறதோ அது இரண்டாவதுபட்சம்தான்” என்று கூறியிருக்கின்றார்.

ஒரு காலகட்டத்துக்கு பிறகு எனது நடிப்புலக வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது வெவ்வேறுவிதமான கதாபாத்திரங்களை செய்த திருப்தி இருக்க வேண்டும். ஹீரோயின்களை பொறுத்தவரை ஹீரோக்களைவிட குறுகிய காலம் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. நான் நடிக்கும் படங்களில் ஒன்றிரண்டு ஹிட்டானால்கூட அடுத்த 2 அல்லது 3 ஆண்டுக்கு தொடர்ந்து நடிக்க முடியும். எனவேதான் என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்கிறேன். நல்ல படத்தில் ஒரு அங்கமாக இருந்தால்கூட போதும் என்றார் இலட்சுமிராய்.