Home நாடு எம்ஆர்டி பணியில் 2-ம் உலகப் போர் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!

எம்ஆர்டி பணியில் 2-ம் உலகப் போர் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!

1058
0
SHARE
Ad

ww2bombகோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பண்டார் மலேசியா எம்ஆர்டி நிலையம் (Mass Rapid Transit – MRT) அருகே நடந்த வெடிவிபத்தில் 3 வங்காள தேசத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

மாநகரக் காவல்துறை இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், அது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

“கட்டுமானப் பணிகளின் போது அந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. விசாரணையில் அந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது கண்டறியப்பட்டது” என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அமர் சிங் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice