Home கலை உலகம் முதல் முறையாகத் திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ!

முதல் முறையாகத் திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ!

927
0
SHARE
Ad

vaikoசென்னை – மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, முதன் முறையாக சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்கவிருக்கிறார்.

‘வேலு நாச்சியார்’ என்ற வரலாற்றுத் திரைப்படத்தை தான் தயாரிக்கப் போவதாக நேற்று செவ்வாய்க்கிழமை, வைகோ அறிவித்தார்.

திரைப்படங்கள் மீது தனக்குக் காதல் இருந்ததாகவும், ஆனால் அதனை வெளியில் காட்டிக் கொண்டதில்லை என்றதில்லை என்றும் வைக்கோ குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

Vaikoஎனவே, கண்ணகி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி, அதன் மூலமாக ‘வேலு நாச்சியார்’ திரைப்படத்தை வைகோ தயாரிக்கிறார்.

முன்னதாக ‘வேலு நாச்சியார்’ என்ற மேடை நாடகத்தில் நடிகர் விஷால், நடிகர் நாசர் ஆகியோருடன் வைகோ கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.