கோலாலம்பூர் – கடந்த அக்டோபர் 6-ம் தேதி, மலேசிய காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில், வெளிநாட்டு தீவிரவாதிகள் என நம்பப்படும் 45 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என தேசியக் காவல்படைத் தலைவர் முகமட் ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.
அனைத்துலக காவல்துறையிடமிருந்து கிடைத்தத் தகவலை வைத்து, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் அவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், மலேசியாவில் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், மலேசியக் காவல்துறை நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டதாகவும் முகமட் ஃபுசி ஹாருன் குறிப்பிட்டிருக்கிறார்.