கோலாலம்பூர் – இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மின்னல் பண்பலை பல ஆக்ககரமான அதேவேளையில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டு நேசிப்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியிலும், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களைப் பயன்படுத்துவோர் மத்தியிலும் அதற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
இதனிடையே, தீபாவளி நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கடந்த அக்டோபர் 10-ம் தேதி தலைநகரில் உள்ள ஹாவேலி உணவகத்தில் நடைபெற்றது.
அறிவிப்பாளர் ரவினும், புவனாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் பிரேமா, மோகன், ஹரிகிருஷ்ணன், சுகன்யா, சசிதரன், சரஸ்வதி, தெரசா என அனைவருமே பாரம்பரிய உடைகளில் வண்ணமயமாக வலம் வந்தனர்.
இச்செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களோடு மலேசியக் கலைத்துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இச்செய்தியாளர் சந்திப்பில் மலேசிய வானொலி தொலைக்காட்சிப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் துவான் ஹாஜி அப்துல் முயிஸ் செஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஒவ்வொரு ஆண்டு மின்னல் பண்பலை பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருவது போல் இந்த ஆண்டும் நேசிப்போம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்ச்சி படைத்து அதற்கு நேயர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்திருப்பது தனது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக ஹாஜி அப்துல் முயிஸ் செஃபி தெரிவித்தார்.
மேலும், மின்னல் பண்பலைக்கும், மின்னல் பண்பலை நேயர்களுக்கும் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை மிகச் சிறப்பான பண்டிகையாக அமைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்ததாக, மின்னல் பண்பலையின் தலைவர் எஸ்.குமரன் பேசுகையில், இந்த ஆண்டு தீபாவளியை அர்த்தமுள்ளதாக மாற்றும் முயற்சியில் நேசம் என்ற கருப்பொருளில் நேச சவால் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பேஸ்புக்கில் இந்த நேச சவாலை ஏற்பவர்கள், தங்களால் முடிந்த உதவிகளைத் தேவைப்படுவோருக்குச் செய்துவிட்டு, அதனை புகைப்படமாகவோ, காணொளியாகவோ பதிவேற்றம் செய்து, பின்னர், தன்னுடன் நேசத்துடன் இருக்கும் 5 நண்பர்களை டேக் (Tag) செய்து அது போல் சவாலை ஏற்கச் சொல்ல வேண்டும் என்று கூறினோம் என்றும் குமரன் தெரிவித்தார்.
இந்த நேச சவால் மக்கள் மத்தியில் பரவி, தேவைப்படுவோருக்குப் பல்வேறு உதவிகள் பெருகின என்று குறிப்பிட்ட குமரன், இந்த உதவிகள் மலேசியாவையும் கடந்து பல தேசங்களுக்கும் சென்றிருப்பதை அறிந்து மின்னல் பண்பலை சிறியதாய் ஒளியேற்றி வைத்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அடைகின்றது என்றும் குமரன் தெரிவித்தார்.
இது விளம்பரத்திற்காகச் செய்யப்பட்டது அல்ல என்பதை உறுதியாகத் தெரிவித்த குமரன், விழிப்புணர்வுக்காக மட்டுமே செய்யப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும் இது போல் பிறருக்கு உதவும் நிகழ்ச்சிகளை மின்னல் பண்பலை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் குமரன் உறுதியளித்தார்.
மின்னல் பண்பலையின் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள்:
TV2 தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள்: