Home நாடு ஜாசின் அருகே சிறிய விமானம் விபத்து!

ஜாசின் அருகே சிறிய விமானம் விபத்து!

840
0
SHARE
Ad

Jasinplanecrashஜாசின் – ஜாசின் அருகே இன்று சனிக்கிழமை சிறிய இரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானதாக நம்பப்படுகின்றது.

விமானத்தில் இருந்த மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார்.

மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைமை துணைக் கண்காணிப்பாளர் கமாருல்சமான் முகமட் டின் கூறுகையில், “இன்று காலை 11.30 மணியளவில் சுங்கை ரம்பாய் அருகே ஆற்றுப்படுக்கையில் படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த 35 வயதான முகமட் ஷாருல் ஷபிரி மீட்கப்பட்டிருக்கிறார்.”

#TamilSchoolmychoice

“அவரால் சிறிய அளவிலான தகவலை மட்டுமே தெரிவிக்க முடிகின்றது. குயிக் சில்வர் ஜிடி – 500 என்ற சிறிய விமானத்தை ஓட்டிய 53 வயதான விமானி ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.