Home உலகம் செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை!

செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை!

709
0
SHARE
Ad

Lamonte McIntyreகன்சாஸ் – செய்யாத குற்றத்திற்காக சுமார் 23 ஆண்டுகள் சிறையில் கழித்த லாமோண்ட் மெக்கின்டயர் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது தாயாரைக் கட்டியணைத்து கதறியது காண்போரை கண்கலங்க வைத்தது.

தனது 17 வயதில் இரட்டை கொலை ஒன்றில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட லாமோண்ட், பொய்யான குற்றச்சாட்டுகளால் 23 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

#TamilSchoolmychoice

இத்தனை ஆண்டுகளாக மகனை விடுவிக்கப் போராடிய லாமோண்டின் தாயார், இறுதியாக தனது போராட்டத்தில் வெற்றி கண்டிருக்கிறார்.

லாமோண்டுக்கு எதிராக ஆதாரம் ஒத்துப் போகவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.