Home கலை உலகம் மின்னல் அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்து!

மின்னல் அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்து!

1748
0
SHARE
Ad

கோலாலம்பூர் -மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் தீபாவளி வாழ்த்துச் செய்தியை இங்கே காணலாம்.

அறிவிப்பாளர் மோகன்

MOGANவாருங்கள் உலகை நேசிப்போம். இந்த வருட தீபாவளியை நேச உணர்வோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் இந்த தீபத்திருநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் இந்த வருடம் நேயர்களோடு கொண்டாடவிருக்கின்றேன். உங்கள் அன்பை தொலைப்பேசியின் உரையாடலின் வாயிலாக எங்களுக்கு உணர்த்துகின்றீர்கள். அன்புக்கு நன்றி. மின்னலுக்கு நன்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்..

#TamilSchoolmychoice

அறிவிப்பாளர் ஹரி

HARIநரகசுரன்  அழிந்து  ஆனந்தம்  கிடைத்ததை  போல  நம்  வாழ்வில்  உள்ள  எல்லா தடை  கற்களும்  படிகற்களாக  மாறி  துன்பங்கள்  நீங்கி  இன்பங்கள்  மலர இனிய  தீபாவளி  வாழ்த்துக்கள்.

அறிவிப்பாளர் குணசுந்தரி

GUNASUNDARIபுத்தாடை உடுத்தி,  இனிப்புகளை சுவைத்து, உள்ள அன்போடு உறவுகளை இணைத்து, மன வருத்தங்களை களைந்து, இனிதே வரவேற்போம் இன்பத் தீபாவளியை. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

அறிவிப்பாளர் பிரேமா கிருஷ்ணன்

PREMA.Kநேயர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி என்றாலே குதுகலம், மனதில் ஒரு விதமான பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்து விடும். உறவுகளோடு தீபாவளி கொண்டாடும் மகிழ்ச்சி ஓர் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான தீபாவளி. இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறாள். அன்பு கணவர் சுரேஷ், மகன் லக்ஷண், மகள் ஷாமித்ரா மற்றும் உற்றார் உறவுகளுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடப்போகிறேன். அதே வேளையில், வருடம் ஒருநாள் வரக்கூடிய இந்த தீபாவளிக்கு, அன்புக்கு ஏங்கும் இதயங்களுக்கு இந்த நன்னாளில் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் நினைத்து பார்த்து உதவிக் கரம் நீட்டுவோம். நம்மால் முடிந்த சிறு உதவியை செய்வோம். பிறரை நேசிப்போம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்வோம். நம்முடைய மகிழ்ச்சியை அவர்களுக்கும் பங்கிட்டு கொடுப்போம். நல்லெண்ணங்கள் நம்முடைய மனதில் தூய ஒளியாய் இந்நாளில் மட்டும் இல்லாமல் எந்நாளிலும் மிளிரச் செய்வோம். மீண்டும் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்.

அறிவிப்பாளர் தியா

TYAநேசத்தோடு கொண்டாடுவோம் இத்தீப திருநாளை. ஒருவரையொருவர் அன்பு செய்து காணாத உறவுகளை சென்று பார்த்து பாசத்தைப் பரிமாறிக்கொள்வோம். ஒளி வீசும் தீபாவளியில் இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுப்போம். பகிர்ந்துக் கொண்டாடுவோம். சுற்றத்தாரோடு அகமகிழ்வோம். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அறிவிப்பாளர் திரேசா லசாரு

TRESA

தித்திக்கும் தீபாவளியை நேசத்தோடு கொண்டாடுவோம். மன்னிப்போம் மறப்போம். மனதாரா வாழ்த்துவோம். உறவுகள் செழித்திட, இரவுகள் ஒளிவீசிட அர்த்தமுள்ள தீபாவளியில் அகமகிழ்வோம். பெரியோர்கள் ஆசிப்பெற்று, இனிப்பு பலகாரங்களை ஒன்றாய் சுவைத்து அன்பை பரிமாறிக்கொள்வோம். நேசத்திற்குரிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மங்கள தீபாவளி வாழ்த்துகள்.

அறிவிப்பாளர் புவனா வீரமோகன்

BUVANA

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! பண்டிகைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இன்றும் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வரும் போது குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றும்.அம்மா அப்பா உடன்பிறந்தவர்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டம் கலைகட்டும். எண்ணைத்தேய்த்து குளித்து, இறைவனை வணங்கி அம்மா காலையில் சுடசுட செய்யும் தோசை இட்லி என காலை பசியாரையோடு தொடங்கும் தீபாவளில் சொல்லில் அடங்காது.நீண்ட நாள் பார்க்காத உறவுகளின் வருகை, அந்த இடைவெளி காலங்களில் நடந்த சம்பவங்களின் அரட்டைகள் இப்படி நினைத்துப் பார்க்கும் ஒவ்வொருநாளும் தீபாவளியாக இருந்தால் எப்படி இருக்கும்!!!!  இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையட்டும்.நேசிப்போம்!

அறிவிப்பாளர் கவிதா கன்னியப்பன்

KAVITHAஇந்த தீபாவளி எனக்கு விடுமுறை. சொந்த ஊரில் அன்புக்குரிய உறவுகளுடன் கொண்டாட்டம். இதைவிட மகிழ்ச்சி எதிலும்.  இருக்கப் போவதில்லை. அனைவரையும் அன்பால் அரவணைத்து நேச ஒளியேற்றுவோம்.

அறிவிப்பாளர் தெய்வீகன்

THEYVEKGANஎங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். விளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுவதைப் போன்று, இந்த தீபாவளி எல்லாருடைய வாழ்விலும் ஒளிவீச என்னுடைய மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அறிவிப்பாளர் சுகன்யா சதாசிவம்

SUGANYAஇவ்வருட தீபாவளி எனக்கு புது லட்டு ஒன்றை பரிசாய் அளித்திருக்கின்றது. மகாகவி எனும் அழகு லட்டு ஒன்றுக்கு தாயாகி நான் கொண்டாடும் முதல் தீபாவளி. என் கணவரையும் என்னையும் குழைத்துச் செய்து வெளியே வந்திருக்கும் அவன் கண்களில் தான் எனக்கு தீபாவளி. இந்த தீபாவளி எனக்கு மகாகவியான தீபாவளி.

அறிவிப்பாளர் பார்வதி நாகராஜன்

PARVATHY(1)தீபாவளி என்றால் இருளை போக்கி ஒளியை தருவது என்பது  தான் பொதுவான கருத்து.. ஆனால் என்னை பொருத்தமட்டில் குழந்தைகள் உள்ளத்தில் குதூகலத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி, அந்த குடும்பத்தில் இருளுக்கே இடமில்லாமல் ஒளிக்கு மேல் ஒளியை சேர்ப்பதே இந்த தீபாவளி என்பேன். மின்னலின் நேயர்களான உங்கள் வாழ்வில் இரட்டிப்பு மகிழ்சி சேர வேண்டும், உங்கள் மனதிலும் இன்பம் போங்க வேண்டும் , உங்கள் இல்லங்களில் மின்னலின் ஓசை கேட்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

அறிவிப்பாளர் ரவின்

RAVIN

தீபாவளி என்றாலே நேயர்களோடு  கொண்டாடுவதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மின்னலோடு இணைந்து. இம்முறை 7ஆவது ஆண்டாக நேயர்களோடு தீபாவளியைக் கொண்டாடுகின்றேன்.  வானொலியில் தீபாவளி ஏற்பாடுகள் 2 மாதத்திற்கு முன்பாகவே ஆரம்பமாகிவிடும். மகிழ்ச்சியோடு அதற்கான ஏற்பாடுகளை அறிவிப்பாளர்களாகிய நாங்கள் செய்துகொண்டிருப்போம். எப்போதும் வீட்டில் குடும்பத்தினரோடு காலையில் தீபாவளியைக் கொண்டாடியப் பிறகு, பிற்பகலில் வானொலியில் அறிவிப்புப் பணியில் நேயர்களோடு  தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இவ்வருடம் காலையில், காலைக் கதிரில் நேயர்களோடு தீபாவளியைக் கொண்டாடுவதில் ஒரு புதிய அனுபவமாக உள்ளது. உறவுகள் அனைவரையும் நேசிப்போம். மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் இவ்வருட தீபாவளியைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

அறிவிப்பாளர் சசி

Sasiஇவ்வருட தீபாவளியை நேயர்களுடன் கொண்டாடப்போகிறேன். ஆம், தீபாவளி அன்று காலையில் ஒலியேறும் உல்லாசம் உற்சாகத்தில் நேயர்களோடு குதுகலமாக தீபாவளி கொண்டாடி மகிழ போகின்றேன். ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகி அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஆனந்தமாய் வாழ வேண்டும் என்கிற எனது நல்லெண்ணத்தை பகிர்ந்துகொள்கிறேன். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.

அறிவிப்பாளர் சரஷ்வதி கண்ணியப்பன்

SARASWATHYதீபாவளி, தீபத்தின் ஆவளியை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கொண்டாடும் அதே வேளையில் இந்த ஆண்டு மின்னல் பண்பலை நேசிப்போம் என்ற கருப்பொருளோடு தீபாவளியை கொண்டாடுகின்றோம். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, இந்த நேசிப்போம் அதாவது தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வது இந்த ஆண்டோடு நின்று விடாமால் ஆண்டு தோறும் அதுவும் தீபாவளிக்கு மட்டுமல்லாமல் எப்பொட்தும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இந்த ஆண்டு தீபாவளி குடும்பாத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் அனைத்து நேயர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. SelliyalAD-Std