Home இந்தியா நிலவேம்புக் குடிநீர் கருத்து: கமல் மீது போலீஸ் புகார்!

நிலவேம்புக் குடிநீர் கருத்து: கமல் மீது போலீஸ் புகார்!

672
0
SHARE
Ad

kamal-hassan-சென்னை – டிங்கிக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல இடங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகின்றது.

ஆனால், அக்குடிநீரைக் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நடிகர் கமல் இந்த விவகாரம் குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்தில், ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை நிலவேம்புக் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டாம் என தனது ரசிகர்களுக்குக் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, சென்னை செம்பியத்தைச்  சேர்ந்த தேவராஜன் என்பவர், நிலவேம்புக் குடிநீர் குறித்து கமல் தவறானத் தகவல்களைப் பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.