சென்னை – அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்து கூறப்பட்டிருந்த வசனங்கள் முற்றிலும் பொய் என்று கூறி பாஜக-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மெர்சல் தயாரிப்பாளர் முரளி, பொன் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகவும், அச்சந்திப்பில் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட வசனங்களை ஒலித்தடை (Mute) செய்ய ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, படத்தில் காட்சிகளை நீக்க வேண்டுமென்றால், தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என தணிக்கை குழு மண்டல தலைவர் மதியழகன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
எனவே, படத்தின் காட்சிகள் வெட்ட வாய்ப்பு இல்லை என்பதால் தற்போதைக்கு ஒலித்தடை மட்டுமே சாத்தியம் என்று கூறப்படுகின்றது.