Home கலை உலகம் விஜய், அட்லீயுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்ஹாசன்!

விஜய், அட்லீயுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்ஹாசன்!

1136
0
SHARE
Ad

kamal mersalசென்னை – ‘மெர்சல்’ திரைப்படத்தின் சர்ச்சைகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்க, நடிகர் கமல்ஹாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது தனிப்பட்ட திரையரங்கில், இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்தார்.

இந்நிலையில், அதன் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அந்தப் புகைப்படத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் பதாகைகள் பின்புறமாகத் தெரிவது பலரையும் கேள்விக் குறிக்குள்ளாக்கியிருக்கிறது.

Kamal mersal teamகாரணம், கமல் நடிப்பில் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் தழுவல் தான் ‘மெர்சல்’ என்ற பேச்சு நிலவி வரும் நிலையில், நேற்று கமலின் தனிப்பட்ட திரையரங்கில் படம் பார்த்துவிட்டு கமல், அட்லீ, விஜய் உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணி அபூர்வ சகோதரர்கள் பதாகை இருப்பது தற்செயலா? அல்லது வேண்மென்றே வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.