கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்களிடம் பேசுகையில் மிகத் தெளிவாகப் பேசுவதாகவும், அது போல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் பேச வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“பிரதமரின் உரையைக் கவனியுங்கள். அவர் மீதான ஊழல் பற்றிப் பேசுகிறாரா? அவர் மீதான விசாரணைகள் பற்றிப் பேசுகிறாரா? அவர் ஒரு குறிப்பிட்ட கதை சொல்லும் விதத்திலேயே கவனம் செலுத்துகிறார். அவர் மக்கள் மனதை வெல்ல முயற்சி செய்கிறார்”
“நமக்கு இருக்கும் சவாலே அது தான். முடிந்தவரை நாம் தெளிவாக விளக்கமளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்: நாம் தவறான வழியில் செல்கிறோம், இந்த நாடு அதனால் பாதிக்கப்படுகின்றது. நாம் மாற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொன்னால், மக்களுக்கு அது எளிமையாகப் புரிந்து அவர்களின் மனதை வெல்ல முடியும்” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நூருல் இசா தெரிவித்திருக்கிறார்.