Home உலகம் பூப்பந்து: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் போட்டியில் வென்றார்

பூப்பந்து: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் போட்டியில் வென்றார்

1015
0
SHARE
Ad
srikanth-badminton-india
ஸ்ரீகாந்த் – கோப்புப் படம்

ஓடன்ஸ் (டென்மார்க்) – இங்கு நடைபெற்று வந்த டென்மார்க் பொது பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிடம்பி ஸ்ரீகாந்த் தென் கொரிய நாட்டின் லீ ஹூயுன்னை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

25 நிமிடங்களிலேயே தனது வெற்றியை நிலைநாட்டிய ஸ்ரீகாந்த் இந்த வெற்றியின் மூலம் ஏழரை இலட்சம் அமெரிக்க டாலரைப் பரிசாகப் பெறுவார்.

கிரிக்கெட்டிலேயே மூழ்கிக் கிடந்த இந்தியாவின் விளையாட்டுத் துறை தற்போது தடம் மாறி அதன் விளையாட்டாளர்கள் மற்ற விளையாட்டுகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் பூப்பந்து முன்னணி வகிக்கிறது. ஒருபுறம் பெண் விளையாட்டாளர் பி.வி.சிந்து தனது முத்திரையைப் பதித்து வர இன்னொரு புறத்தில் ஸ்ரீகாந்தும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

தற்போது பூப்பந்து விளையாட்டில் உலக விளையாட்டாளர்கள் வரிசையில் ஸ்ரீகாந்த் 8-வது நிலையில் இருந்து வருகிறார்.

deepavali-astro-banner